படும் மோசமான நிலைக்கு சென்ற இலங்கை ரூபாவின் பெறுமதி

Report Print Murali Murali in பணம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில், இன்று வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 166.64 ரூபாவாக பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 163.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டுவருவதால், இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.