மிகவும் மோசமடைந்தது ரூபாவின் பெறுமதி!

Report Print Murali Murali in பணம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் சரிவை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி, 167.41 ரூபாவாக, பதிவாகியிருந்ததுடன், கொள்வனவுப் பெறுமதி, 163.87 ரூபாகவும் பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியாக இலங்கை ரூபாவின் பெறுமதி சரிவை சந்தித்து வருவதனால் இறக்குமதிப் பொருள்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், ரூபாயின் பெறுமதி குறைந்துள்ளதால், நாட்டின் கடன் தொகையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.