கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது இலங்கை ரூபாவின் பெறுமதி!

Report Print Aasim in பணம்

அமெரிக்க டொலரின் பெறுமதி 170 ரூபாவைத் தாண்டியுள்ளதாக செலாவணி பரிவர்த்தனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மதிப்பிழந்து வரும் ரூபாவின் பெறுமதியில் இன்றும் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 170 ரூபாவைத் தாண்டியுள்ளது. .

மத்திய வங்கியின் செலாவணி விகிதத்தின் பிரகாரம் டொலரின் கொள்வனவு விலை 166.78 வாகவும் டொலரின் விற்பனைப் பெறுமதி 170.65 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் மதிப்பு தொடர்ந்தும் சரியலாம் என்று நாணயச் சந்தையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.