அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்!

Report Print Vethu Vethu in பணம்

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 173 ரூபாயை நெருங்கியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்தற்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 172.99 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 169.10 ரூபாயாக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 172.72 ரூபாயாக பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலர் வலுவுடைந்தமையினால் ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.