வேகமாக அதிகரித்தது அமெரிக்க டொலரின் விலை! இலங்கை ரூபாய்க்கு ஏற்பட்டுள்ள நிலை

Report Print Steephen Steephen in பணம்

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 179 ரூபாயை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 175.11 ரூபாய் எனவும், விற்பனை விலை 179.04 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்கள் சம்பந்தமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கை ரூபாயின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

இந்த நிலை நீடித்தால், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 190 ரூபாய் வரை உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.