வரலாற்றில் மிக மோசமான பெறுமதியை பதிவு செய்த இலங்கை ரூபா!

Report Print Vethu Vethu in பணம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா நேற்று மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 180.72 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் விற்பனை விலை 184.69 ரூபாவாக பதிவாகியுள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி டொலர் ஒன்றின் விற்பனை விலை 152.85 ரூபாவாக காணப்பட்ட நிலையில் நேற்றைய தினம் 184.69 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதற்கமைய ஒரு வருட காலப்பகுதியில் டொலருக்கு எதிராக 31.84 வீதத்தில் டொலர் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

எனினும் 2005ஆம்ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 28.93 வீதத்திலேயே ரூபாய் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.