சர்வதேசத்திடம் இருந்து இலங்கைக்கு 87 பில்லியன் ரூபாய் கடன்

Report Print Ajith Ajith in பணம்

இலங்கை மீண்டும் ஒருமுறை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெற்றுக் கொள்ளவுள்ளது.

2019ஆம் ஆண்டு இறுதியில் 1.5 பில்லியன் டொலர்களை மீள செலுத்தியதன் பின்னர் இந்த கடனுக்கான விண்ணப்பத்தை இலங்கை சமர்ப்பிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பேச்சு நடத்த சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டு அதிகாரிகள், பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வரவுள்ளனர்.

இதேவேளை மிலேனியம் செலேஞ் கோப்பரேசனின் 87 பில்லியன் ரூபாய் கடன் எதிர்வரும் செப்டெம்பரில் இலங்கைக்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒக்டோபரில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு காரணமாக இந்த கடனுதவியை மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் இடைநிறுத்தி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.