இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ள இந்தியா

Report Print Ajith Ajith in பணம்
149Shares

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடன் திட்டத்தின் கீழ் இந்தியா, இலங்கைக்கு 1.3 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.

இலங்கையின் புகையிரத துறையை அபிவிருத்தி செய்யும் முகமாகவே இந்த கடன் வழங்கப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வடக்கு மற்றும் தெற்கு புகையிரத பாதைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இந்த கடன் திட்டம் 2017ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், மாஹோ - ஓமந்தை வீதி திருத்தம், மாஹோ - அநுராதபுரம் புகையிரத வீதியின் தொலை தொடர்பு கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ரத்மலானையில் புகையிரத கட்டுமானகம் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.