இன்றும் திடீரென வளர்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி

Report Print Vethu Vethu in பணம்

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது திடீரென இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 181.28 ரூபாவாக பதிவாகி இருந்தது. இன்றைய தினமும் இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 176.3416 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்னை 180.1999 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.