டொலருக்கு எதிராக மீண்டும் வீழ்ச்சி அடைந்த ரூபாவின் பெறுமதி

Report Print Vethu Vethu in பணம்

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று வீத தரவுகளுக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.42 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் டொலருக்கு எதிராக வளர்ச்சியடைந்து காணப்பட்ட ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் திடீர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு பங்கு சந்தையின் விலை சுட்டென்னும் நேற்றைய தினம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக பங்குச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.