மீண்டும் வலுவடைந்து வரும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!

Report Print Vethu Vethu in பணம்

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களின் பின்னர் இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்று வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கு அமைய இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.16 ரூபாயாக பதிவாகியுள்ளது.

நாட்டின் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, ரூபாவின் பெறுமதியை ஸ்திரமான முறையில் பேண திடசங்கற்பம் பூண்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளார்.

இறக்குமதியாளர்களுக்கு தேவையான டொலர் பற்றாக்குறை காரணமாக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக பொருளியியல் நிபுணர்கள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.