இலங்கை ரூபாவின் பெறுமதி! பதிவாகியுள்ள மாற்றம்

Report Print Sujitha Sri in பணம்

அமெரிக்க டொலருடன் ஒப்படுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதியானது நான்கரை சதவீதத்தால் வலுவடைந்துள்ளது.

இந்த விடயத்தை சர்வதேச நிதிச்சந்தை நிலவரங்கள் தெரிவிப்பதாக சுட்டிக்காட்டி அரச ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மார்ச் 31ஆம் திகதி வரை ரூபாவின் பெறுமதி 3.9 சதவீதத்தால் அதிகரித்திருந்த நிலையில் நேற்று நான்கரை சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை ரூபாவின் பெறுமதியானது, அரச பிணைமுறிகள் மீதான உள்நாட்டு - வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமை, சுற்றுலாத்துறை வருமானங்கள் உயர்ந்தமை, வெளிநாட்டில் இருந்து கிடைத்த நிதி பாய்ச்சல்கள் என்பன காரணமாகவே அதிகரித்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த மாதங்களில் 184 ரூபாவை கடந்த இலங்கை ரூபாவின் பெறுமதி தற்போது வலுவான நிலையில் உள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.04.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

நாணயம்

வாங்கும் விலை

விற்கும் விலை

டொலர் (அவுஸ்திரேலியா)

121.7039

126.9493

டொலர் (கனடா)

128.5144

133.3428

சீனா (யுவான்)

25.4076

26.6326

யூரோ (யூரோவலயம்)

192.8029

199.7343

யென் (ஜப்பான்)

1.5392

1.5969

டொலர் (சிங்கப்பூர்)

126.9464

131.3531

ஸ்ரேலிங்பவுண் (ஐக்கியஇராச்சியம் )

226.3746

233.8107

பிராங் (சுவிற்சர்லாந்து)

171.9774

178.1643

டொலர் (ஐக்கியஅமெரிக்கா)

172.6505

176.4949

அமெரிக்க டொலர்களுக்கு சமமான மத்திய கிழக்கு நாடுகளின் நாணய விகிதங்கள்:

நாடு

நாணயங்கள்

நாணயங்களின் பெறுமதி

பஹரன்

தினார்

463.1675

குவைத்

தினார்

573.6567

ஓமான்

றியால்

453.5613

கட்டார்

றியால்

47.9564

சவுதிஅரேபியா

றியால்

46.5613

ஐக்கியஅரபுஇராச்சியம்

திர்கம்

47.5399

Latest Offers