மீண்டும் வீழ்ச்சி அடைந்து செல்லும் இலங்கை ரூபாவின் பெறுமதி!

Report Print Vethu Vethu in பணம்

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய டொலரின் விற்பனை விலை 177.45 ரூபாயாக பதிவாகியுள்ளது.

கடந்த வருடம் பாரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தன. எனினும் கடந்த மாதம் ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரிக்க தொடங்கின.

எனினும் கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 173 ரூபா 50 சதம் விற்பனை பெறுமதி 177 ரூபா 45 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபா 20 சதம். விற்பனை பெறுமதி 230 ரூபா 66 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192 ரூபா 28 சதம் விற்பனை பெறுமதி 199 ரூபா 29 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 169 ரூபா 19 சதம். விற்பனை பெறுமதி 175 ரூபா 36 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 128 ரூபா 11 சதம் விற்பனை பெறுமதி 132 ரூபா 98 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 16 சதம். விற்பனை பெறுமதி 126 ரூபா 46 சதம்.