அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Report Print Vethu Vethu in பணம்

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதி ஸ்திர நிலையை அடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.63 ரூபாயாக நேற்று பதிவாகியுள்ளது.

கடந்த மாதத்தில் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

அதற்கமைய பாரிய வீழ்ச்சியில் இருந்த ரூபாயின் பெறுமதி நேற்று சற்று அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.