இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

Report Print Vethu Vethu in பணம்

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் ஸ்திர நிலையை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களுக்கமைய இந்த தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.78 ரூபாயாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முதல் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருகிறது. இந்த வருடத்தின் இதுவரையான காலம் வரை ரூபாயின் பெறுமதி 3.72 வீதம் அதிகரித்துள்ளது.

எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 16 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.