அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் சற்று அதிகரித்த நிலையில் காணப்பட்ட இலங்கை ரூபாவின் பெறுமதி வார இறுதியில் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய இந்த வீழ்ச்சியை காண முடிந்துள்ளது.
கடந்த வாரங்களில் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 175 ரூபாவாக காணப்பட்டது. எனினும் இந்த வார இறுதியில் டொலர் ஒன்றின் பெறுமதிக்கு எதிராக 177.40 ரூபா வரை சென்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிடப்பட்டுள்ளது.