அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி இன்று 194 ஆகக் குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணயமாற்று விகிதங்களின் படி டொலரின் விற்பனைப் பெறுமதி இன்று 194.07 ஆகும்.
கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 194 ஆக குறைந்தது. எனினும் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் ரூபாயின் நிலையான அளவைக் காட்டினாலும் அது மீண்டும் வீழ்ச்சியடையும் போக்கே காணப்படுகிறது.
இதேவேளை ஜனவரி 1 முதல் ஜனவரி 8 வரை டொலருக்கு எதிராக ரூபா 0.5% சரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.