அமெரிக்க டொலர், பவுண்டுக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

Report Print Vethu Vethu in பணம்
1080Shares

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி 4.2 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் அந்த காலப்பகுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி, ஸ்ரேலிங் பவுண்டிற்கு நிகராக நூற்று 5.4 வீதமும், யூரோவுக்கு நிகராக 2.7 வீதமும், அவுஸ்திரேலிய டொலருக்கு நிகராக 4.3 வீதமும் இந்திய ரூபாய்க்கு நிகரான 4.6 வீதமும், ஜப்பான் யென்னிற்கு நிகராக 2.8 வீதமும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி 2.6 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.