வீதியில் அநாதரவாக கைவிடப்பட்ட நவீன ரக வாகனம்!

Report Print Vethu Vethu in வாகனம்

புத்தளத்தில் உரிமையாளர் இன்றி நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

புத்தளம் தங்கொட்டுவ பொது சந்தையில் குறித்த வாகனம் கைவிட்டு சென்ற நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய நேற்று இந்த வாகனம் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

போலவத்தை பிரதேசத்தின் நபர் ஒருவர் இந்த மோட்டார் வாகனத்தில் வருகை தந்துள்ளதாக தெரிய வருகிறது.

மேலதிக விசாரணைக்காக அந்த வாகனம் வென்னப்புவ பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் அல்லது ஈடுபட முயற்சித்தவர்களால், பொலிஸாரை கண்டதும் இவ்வாறு வாகனத்தை கைவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேககிக்கப்படுகிறது.

வென்னப்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You may like this video