இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய வகை முச்சக்கரவண்டி!

Report Print Vethu Vethu in வாகனம்

இங்கையில் முழுமையாக இலத்திரனியல் வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய 1.5 மில்லியன் எரிபொருள் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளுக்கு உரிமையாளராகும் சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் என்டர்ப்ரைஸ் ஸ்ரீலங்கா என்ற திட்டத்தின் பிரதான யோசனையாகும்.

இந்த முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்துவதற்கு கடன் திட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அரசாங்கத்தினால் கடன் உதவி வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் 10 வீதத்தை மாத்திரம் செலுத்தி முச்சக்கரவண்டிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கையில் தற்போது பயன்படுத்தும் எரிபொருள் மூலம் பயன்படுத்தும் முச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொள்ள பங்களாதேஷ் விருப்பம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் தற்போது பயன்பாட்டிலுள்ள முச்சக்கர வண்டிகளை பிராந்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சூழலை மாசுபடுத்தாத முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவர முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.