புரட்சியை ஏற்படுத்திய மோட்டார் வாகனம் இலங்கையில் அறிமுகம்

Report Print Vethu Vethu in வாகனம்

ஆசிய சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய Toyota Rush SUV மோட்டார் வாகனம் தற்போது இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் வாகனம் Toyota மோட்டார் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தி வைக்கபட்டுள்ளது.

7 ஆசனங்களை கொண்ட இந்த வாகனம் மிகவும் பாதுகாப்பானது மற்றும் வசதியானதென தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச தரத்திலான மோட்டார் வாகனம் ஒன்றை இலங்கையில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டமை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் அதிக விலையில் இந்த வாகனம் விற்பனை செய்யப்படுகின்றது. ஆசியாவில் உரிய விலை ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர் யுவதிகளுக்கு இலகு பயணத்தை மேற்கொள்வதற்கும் இந்த வாகனம் உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 வருடங்களில் 100,000 கிலோ மீற்றர் பயணிக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை தரக்கூடிய வகையில் இந்த மோட்டார் வாகனம் உள்ளது.

மிகவும் அழகான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள இந்த வாகனத்தில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிட்டத்தட்ட 7 ஆசனங்கள் இந்த வாகனத்தில் பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1.5l Dual VVTI இயந்திரத்துடன் rear wheel drive வாகனமான இது Vehicle Stability Control, Hill Start Assist, Traction Control, Electronic Brake Distribution போன்ற விசேட தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. தரையில் இருந்து 220 மீற்றர் உயரத்தில் 600 மில்லிலீற்றர் உயர நீரிலும் பயணிக்கும் வசதிகளை இந்த வாகனம் கொண்டுள்ளது.

ASEAN NCAP பரிசோதனையில் 5 star Rating பெற்றுள்ளதுடன் விசேட பாதுகாப்பையும் கொண்டுள்ளது.

Toyota Rush SUV மோட்டார் வாகனத்தை அறிமுக விலையான 7,995,000/- ரூபாவுக்கு பெற்று கொள்ள முடியும்.

வத்தளை, இரத்மலானை, மஹரகம, குருணாகல், நீர்க்கொழும்பு, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய விற்பனை நிலையங்களில் வாகனத்தை கொள்வனவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.