பிரதமர் அறிவித்த அதிரடி சலுகை! வாகன விற்பனையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

Report Print Vethu Vethu in வாகனம்

இலங்கையில் சிறிய ரக மோட்டார் வாகன விற்பனை பூஜ்ஜியம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறிய ரக மோட்டார் வாகனத்திற்காக விதிக்கப்பட்ட புதிய வரி மாத்திரமின்றி ஏனைய வரியையும் நீக்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

சிறிய ரக மோட்டார் வாகனம் இலங்கைக்கு பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றமை போக்குவரத்து நெரிசலுக்கு பிரதான காரணம் என கூறி மோட்டார் வாகனத்தின் வரி அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த கருத்தே விற்பனை தடைப்படுவதற்கு காரணமாகியுள்ளதாக மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Latest Offers

loading...