இலங்கையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்! வாகனங்கள் வாங்க காத்திருந்தோருக்கு அதிர்ச்சி

Report Print Vethu Vethu in வாகனம்

இலங்கையில் வாகனங்களின் விலை, பாரியளவில் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலருடன் ஒப்பிடும் ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

இதன் காரணமாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா முதல் 8 இலட்சம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் உள்ள வாகனங்களின் விற்பனை பாரிய வேகத்தில் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்று 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி நிலையை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers