வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு ஓர் முக்கிய தகவல்

Report Print Vethu Vethu in வாகனம்

இலங்கை மக்களின் வாகன கனவினை நனவாக்கி கொள்ள முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை விடவும் வாகனங்களின் விலை மிகவும் வேகமான முறையில் அதிகரித்து வருகின்றது.

இதற்கு முன்னர் தீர்வை வரி உட்பட பல வரிகள் காரணமாக வாகனங்களில் விலைகளில் அதிரிப்பு நிலை ஏற்பட்டது. தற்போது ரூபாயின் வீழ்ச்சி காரணமாக வாகனங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

அதற்கமைய மீண்டும் 3 முதல் 8 லட்சம் ரூபா வரையில் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளது.

டொலருக்காக செலுத்தப்படும் ரூபாவின் தொகை அதிகரிக்கப்படுகின்றமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய டொயோட்டா எக்சியோ வாகனம் ஒன்று 8 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் சுசுகி வெகன் ஆர் வாகனம் 3 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. அதற்கு சமமாக ஏனைய வாகனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.