இலங்கையில் முதன்முறையாக அறிமுகமாகும் அதிநவீன கார்! இத்தனை கோடி ரூபாவா?

Report Print Vethu Vethu in வாகனம்

இலங்கைக்கு முதல் முறையாக அதிநவீன சொகுசு கார் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 12 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெறுமதியான அதிக விலையுடன் கூடிய மோட்டார் வாகனங்கள் கடந்த நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

கிரிக்கெட் வீரர்களான லசித் மாலிங்க, அரவிந்த டி சில்வா கொண்டுவந்த மோட்டார் வாகனங்கள், தொடர்பில் மக்களிடம் அதிகம் பேசப்பட்டன.

அதற்கமைய உலக புகழ்பெற்ற McLaren 570GT என்ற ரகத்தை சேர்ந்த நவீன மோட்டார் வாகனம் ஒன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் இதன் உரிமையாளர் தொடர்பில் இதுவரை தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை.