இலங்கையில் வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

Report Print Sujitha Sri in வாகனம்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியான தகவலொன்றை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் ஆண்டில் வாகனங்களின் விலைகள் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது தற்போது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி என்பவற்றால் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 179 ரூபாயை தாண்டியதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டிருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த நிலை நீடித்தால், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 190 ரூபாய் வரை உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...