பிரித்தானியாவின் அதிநவீன கார் இலங்கையில் அறிமுகம்! எரிபொருள் இன்றி பயணிக்கும் வசதி

Report Print Vethu Vethu in வாகனம்

இலங்கையில் மின்சாரத்தில் இயங்கும் அதிநவீன கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

MG EZS என்ற இலத்திரனியல் SUV வாகனம் தற்போது இலங்கை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை கொள்வனவாளர்கள் செலுத்தி பார்க்க முடியும் என குறித்த வாகன நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Battery/Motor/BMS க்காக 8 வருடம் அல்லது 120000 கிலோ மீற்றர் தூரம் பயணிக்க கூடிய வகையில் இந்த மோட்டார் வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை இந்த வாகனத்தை சார்ஜ் செய்தால் 428 கிலோ மீற்றர் தூரம் வரை பயணிக்க முடியும்.

இலங்கையினுள் இந்த இலத்திரனியல் மோட்டார் காரின் விலை 67 இலட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Dynamic Red, Pearl Black, Arctic white மற்றும் London Blue ஆகிய நிறங்களில் இந்த காரினை பெற்றுக் கெள்ள முடியும்.

MG மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனத்தின் தலைமையகம் பிரித்தானியாவில் உள்ளது. பிரித்தானியாவின் உயர் ரக தரத்தில் இந்த மோட்டார் வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...