இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனம்

Report Print Vethu Vethu in வாகனம்

இலங்கையில் முதன்முறையாக அதிநவீன மோட்டார் வாகனம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஹர்ஷ சுபசிங்கவின் வழிகாட்டலின் கீழ் 2014ஆம் ஆண்டு இந்த மோட்டார் தயாரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் வாகனத்திற்காக பயன்படுத்தப்பட்ட பாகங்கள் அனைத்தும் 100 சதவீதம் இலங்கையிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவை பல்கலைக்கழக பொறியியலாளர்களான ஷஷிரங்க டி சில்வா உட்பட குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு இதனை பூர்த்தி செய்துள்ளனர்.

இலங்கை நிபுணர்களின் கண்காணிப்பில் இந்த மோட்டார் வாகனம் முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

முழுமையான மின்சார சக்தியில் பயணிக்கும் இந்த மோட்டார் வாகனம் சுமார் 1500 கிலோ கிராம் நிறையில் காணப்படுகின்றது. இந்த வாகனம் 3.6 நொடிபொழுதில் ஒரு கிலோ மீற்றர் தூரம் பயணிக்கும் என குறிப்பிடப்படுகின்றது. இதன் முழுமையான வேகம் மணிக்கு 240 கிலோ மீற்றராகும்.

இரண்டு பேர் மாத்திரம் பயணிக்க கூடிய வகையில் இந்த மோட்டார் வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக இந்த மோட்டார் வாகனத்தை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Latest Offers