இலங்கையில் சிறிய ரக வாகனங்களின் விலைகள் அதிகரிக்குமா? வெளியாகியுள்ள தகவல்

Report Print Sujitha Sri in வாகனம்

இலங்கையில் சிறிய ரக வாகனங்களின் விலைகள் உயர்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும்,

சொகுசு வாகனங்களின் இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சிறிய ரக வாகனங்களின் விலைகள் உயர்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

என்ற போதும் தற்போது காட்சியறைகளில் விற்பனைக்காக உள்ள வாகனங்கள் பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.

இதேவேளை அமெரிக்க டொலர், ஸ்ரேலின் பவுண்ஸ் மற்றும் ஜப்பானிய யென் போன்ற நாணயங்களின் பெறுமதி அதிகரிப்பும் இதற்கு காரணமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 75,000 ரூபா செலுத்த வேண்டிய நுகர்வோரொருவர் ஒரு லட்சம் ரூபாவினை வழங்க நேரிடலாம் எனவும் அவர் கூறியுள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.