பலாங்கொடை பிரதேசத்தில் இன்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பெருமளவான வனப்பகுதி எரிந்து நாசமாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.
பலாங்கொடை நன்பேரியல் தோட்டத்தை அண்மித்த சமவெளிப்பகுதி ஒன்றிலேயே குறித்த காட்டுத் தீ இன்று மாலை திடீரென்று பரவியுள்ளது.
இந்தக் காட்டுத்தீ காரணமாக நுவரெலியாவை அண்மித்த உலக முடிவிடம் எனப்படும் வேர்ல்ட் எண்ட் வரையான பாரிய பிரதேசமொன்று காட்டுத்தீயினால் கருகும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வனப்பகுதியில் வாழும் அரிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் என்பனவும் பாதிப்புக்குள்ளாகக் கூடும்.
இந்நிலையில் வனத்துறையினர் தற்போது பலாங்கொடை நன்பேரியல் தோட்டப் பகுதிக்கு விரைந்துள்ளதுடன், காட்டுத்தீயை அணைக்கும் தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.