பண்டாரவளை - கும்பல்வெல, மாஹமெவுனாவ அசபுவ காட்டு பகுதியில் நேற்றுமாலை பரவிய தீ தற்போது ஓரளவு தணிந்துள்ளது.
பண்டாரவளை கும்பல்வெல மாஹமெவுனா அசபுவ காட்டுபகுதியில் நேற்று (10) பிற்பகல் தீ பரவியுள்ளது.
காட்டு பகுதியில் கடும் காற்று வீசுவதனால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் தீயினை கட்டுப்பாட்டுக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
தற்போது தீ பரவும் வேகம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவியுள்ள பகுதியின் வீடுகளிலுள்ள மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.