பங்களாதேஷை மையமாக கொண்டு பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்க ஆபாயம் ஒன்று காணப்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பங்களாதேஷ், கிழக்கு இந்திய பகுதிகள் என்பன கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிப் படுகைகள் அமைந்துள்ளன. குறித்த பகுதியானது நில அதிர்வை தாங்ககூடிய சக்தி இல்லாத பகுதிகளாகும்.
தற்போது குறித்த பகுதியில் அமைந்துள்ள டெக்கானிக் பிளேட் எனப்படும் தகடுகளின் அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நில நடுக்கமானது 8.2 முதல் 9க்கும் மேற்பட்ட ரிக்டர் அளவில் பதிவாகும் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள. நியூ மெக்சிகோ ஸ்டேட் பல்கலைக்கழக நிலநடுக்க ஆய்வாளர் ஜேம்ஸ் நி "இந்த ஆய்வு சரியானதாக இருந்தால், அழுத்தம்கூடி வரும் பிளேட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அவ்வாறு ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிழக்கு இந்தியா நிச்சயம் எதிர்பாராத விளைவுகளை சந்திக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துன், இதன் பாதிப்புகளானது மியான்மர் வரை நீடிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, கடந்த ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக சுமார் 9 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருந்தனர்.
இதேவேளை, குறித்த நிலநடுக்கம் இலங்கையும் தாக்க கூடுமா என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.