வருடாந்த பர்ஷீட் எரிகற்கள் மழை இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் அதிகளவு தென்படும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வானின் வடக்கு திசையிலுள்ள பரீசியஸ் நட்சத்திரத்திற்கு அருகில் இந்த எரிகற்கள் பூமியில் விழுவதை அவதானிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் ஜூலை முதல் ஒகஸ்ட் வரையான காலப்பகுதி வரை இந்த எரிகற்கள் வீச்சு இடம்பெறுகிறது.
இதன் உச்சக்கட்ட நிகழ்வு இன்று இடம்பெறும் என இலங்கை மருத்துவ ரசாயன அறிவியல் சங்கத்தின் இணை செயலாளர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மணித்தியாலத்திற்கு 100 எரிகற்கள் வரை வீழ்வதை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.