சுற்றாடலில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் வெளிநாட்டு விஞ்ஞானிகள்

Report Print Kumutha Kumutha in இயற்கை
49Shares

வடமத்திய மாகாணத்தில் விளை நிலங்களுக்கு பயன்படுத்தப்படும் இரசாயண உரங்களால் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் ஆராய வெளிநாட்டு விஞ்ஞானிகள் குழு இலங்கை வரவுள்ளனர்.

12 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழுவினர், இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர். இவர்களால் விசேட மாநாடு ஒன்றும் நடத்தப்படவுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் அனுசரணையுடனே குறித்த விஞ்ஞானிகள் குழு இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments