சிங்கராஜ வனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!

Report Print Vethu Vethu in இயற்கை
7297Shares

இலங்கையின் தென் பகுதி காட்டில் அரியவகையான பாம்பு இனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனத்திலுள்ள மலைக் காடுகளை சுற்றியுள்ள பிரதேசங்களில் இந்த வகையான பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த பிரபல பாம்பு நிபுணரான மென்டிஸ் விக்ரமசிங்கவினால் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு Dendrelaphis Sinharajensis என்ற விஞ்ஞான பெயர் சூட்டப்பட்டுள்ளது.

672 மில்லி மீற்றர் நீளமான இந்த பாம்பினம், மிகவும் மெல்லிய உடல் தோற்றத்தினை கொண்டுள்ளது. பெரிய தட்டையான தலையை கொண்ட பாம்புகள் மிகவும் அரிய வகையானவை என திரு.மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்த வகையான பாம்புகள் சிங்கராஜ வனத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் துடுவ, அத்வெல்தொட்ட, ஹொரகஸ்மன்கட, பெலேன, கக்குலேகக போன்ற பிரதேசங்களில் இந்த புதிய பாம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாம்பு இனம் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் தெனியாய பிரதேசத்தில் சொந்தமான சிங்கராஜ வனத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரிய தட்டையான தலையை இந்த பாம்பு இனம் கொண்டிருக்கும். உடல் பகுதி சிவப்பு நிறத்தில் உள்ள நிலையில் அது அச்சமடையும் சந்தர்ப்பங்களில் உடலின் முன் பகுதி ஊதப்பட்டு அதன் சிவப்பு நிறம் தெளிவாக காணப்படும்.

கறுப்பு நிறத்திலான இரண்டு கோடுகள் காண முடிவதோடு அதன் நடுவில் வெள்ளை நிறமும் காணமுடியும். உடலின் கீழ் பகுதியில் ஒழுங்கற்ற பழுப்பு நிறத்தில் கோடிட்டு காணப்படும் என விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Comments