நாட்டின் பல பிரதேசங்களில் கடும் வறட்சி நிலவுவதால் மக்கள் மாத்திரம் இன்றி வன விலங்குகளும் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.
எனவே சரணாலயங்களில் உள்ள விலங்குகளின் நீர் தேவை பூர்த்தி செய்ய பௌசர்கள் மற்றும் வேறு வழிகள் மூலம் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் ஜெனரல் டபிள்யு.எஸ்.கே.பதிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை வனவிலங்குகளை சரணாலயங்களில் பார்வையிட வருவோர் வனவிலங்குகளுக்கு செயற்கை தயாரிப்பு உணவுகளை வழங்க வேணடாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை உணவுகளுக்கு அடிமையாகும் வனவிலங்குகள் சில காலங்களில் குறித்த உணவுகளைத் தேடி கிராமங்களுக்குள் உள்நுழைவதாகவும் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மழைவீழ்ச்சி இல்லாததால் பொலநறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் கடுமையான வறட்சியான காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.