சுற்றுலா… செல்ல விரும்பாத மனிதர்கள் எவருமே இருக்கமாட்டார்கள், இன்று மனிதன் நிலாவுக்கும் சுற்றுலா செல்ல தயாராகிவிட்டான்.
உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின் படி வழக்கமான இடத்தை விட்டு வேறு ஒரு இடத்துக்கு ஓய்வு அல்லது நிம்மதி, மகிழ்ச்சிக்காக சென்று தங்கி வருவது சுற்றுலா என்று கூறப்படுகிறது.
நண்பர்களோடு சென்றது, சிறிய வயதில் உறவினர்களோடு சென்ற சுற்றுலா என நம் வாழ்வில் ஏகப்பட்ட ஞாபகங்களும், சங்தோஷங்களும் நிறைய இருக்கும்! சொல்லும்போதே பலருக்கும் சில நினைவுகள் வந்திருக்கும்…இதெல்லாம் ஏன் இப்பொழுது என யோசிப்பவர்களின் கவனத்திற்கு இந்த காணொளி…
இன்று உலக சுற்றுலா தினம்.