தேர்தல் நடாத்தப்பட வேண்டும் - சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க கூட்டு எதிர்க்கட்சி தயார்

Report Print Kumutha Kumutha in இயற்கை
45Shares

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை உடனடியாக நடத்தக்கோரி தேர்தல்கள் திணைக்களத்திற்கு முன்பாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை மாகாண சபை உறுப்பினர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த தேர்தலானது உடனடியாக நடத்தப்படவேண்டும் என்றும், இல்லையேல் கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் மேல்மாகாண சபையின் உறுப்பினர் சுனில் ஜயமனி தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கூட்டு எதிர்கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியியை சார்ந்த குழு இதுவரை 3 கூட்டுறவுத்தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்துள்ளதாகவும், இவர்கள் எதிர்வரும் தேர்தல்களை குழப்புவதற்கு தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments