இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடும் வறட்சி காரணமாக மஹியங்களை - லொல்கல்ல ஓயவின் நீர் மட்ட அதிகமாக குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக அதிக வெப்பம் காரணமாக நீர்த்தேக்ககம் கட்டுமானத்திற்கு பின்னர் முதல் முறையாக அந்த நீர்த்தேகத்தில் மூழ்கியிருந்த பழைய பதுளை - மஹியங்களை வீதி மீண்டும் தெரிய ஆரம்பித்துள்ளது.
மஹாவலி அபிவிருத்தி யோசனை முறைக்கமைய 1982ஆம் ஆண்டு இந்த நீர்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரலாற்றில் முதல் முறையாக இந்த அளவிற்கு நீர் வற்றியுள்ளமை இதுவே முதற்தடவை என அந்த பகுதியை சேர்ந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
1000 ஏக்கர் விசாலமான நீர்த்தேகம் நீரின்றி வறண்டு போய்காட்சி அளிக்கிறது. நீர்த்தேகத்திற்கு மத்தியில் சில இடங்களில் மாத்திரம் நீர் உள்ளமையை காணமுடிந்துள்ளன.
இதன் காரணமாக இந்த நீர்த்தேகத்தில் மஹாவலி இடையிலான பள்ளத்தாக்கினை இணைக்கும் நீரோட்டம் வறட்சியடையும் நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.