கடந்த சில மாதங்களாக இலங்கையில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று மாலை வேளையிலிருந்து நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்ததாக திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் கண்டி, பொலநறுவை, கதிர்காமம், கம்பஹா போன்ற இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
எதிர்வரும் நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 50 முதல் 100 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.