பாரிய அழிவினை சந்திக்க காத்திருக்கும் தெற்காசிய நாடுகள்

Report Print Vino in இயற்கை
328Shares

தெற்காசிய பகுதிகளில் அதிகளவு நிலநடுக்கம் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலினை வெளியிட்டுள்ளனர்.

சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் இந்தோனேசிய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குறித்த விடையம் தொடர்பில் ஆய்வு ஒன்றினை நடத்தியுள்ளனர்.

இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் புதிதாக ஏற்பட்டுள்ள பாறை அடுக்கால் இந்த நிலைமை வரக்கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு அந்தமான், இந்தோனேஷியா மற்றும் சுமத்திரா பகுதிகளில் நிலநடுக்கத்தால் இந்திய பெருங்கடலின் ஆழத்தில் பாறை நகர்வால் இந்தியப் பெருங்கடல் பகுதியின் ஆழத்தில் புதிய பாறை அடுக்கு உருவாகியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே உள்ள பாறை அடுக்குடன், புதிய பாறை அடுக்கும் மோதுவதால் எதிர்காலத்தில் மிகப்பெரும் அளவிலான நிலநடுக்கங்கள் தெற்காசியாவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments