இரத்தினபுரி மக்களுக்கு இயற்கை கொடுத்த இன்பம்

Report Print Shalini in இயற்கை

பருவமழை பொய்த்ததால் நீண்ட காலமாக நிலவிய வறட்சியால் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று சில இடங்களில் மழை பெய்யத்தொடங்கியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடைப் பகுதியில் இன்று மாலை தொடக்கம் கன மழை தொடர்ச்சியாகப் பெய்து வருகின்றது.

இதனால் மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் ஓரளவிற்கு நிம்மதிப்பெருமூச்சு விடக்கூடிய அளவிற்கு இருக்கின்றது.

இதேவேளை மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்தில் இன்று அவ்வப்போது ஓரளவு மழை பெய்துவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments