இயற்கையை பதம் பார்த்த மனிதன்

Report Print Gokulan Gokulan in இயற்கை
207Shares

மனிதனின் தவறை அழகாய் உணர்த்திய இயற்கையின் ஒரு பகுதி ரஷ்யா - உஸுரி வளைகுடா ஆகும்

குறித்த பகுதியில் ஒரு காலத்தில் அருகில் இருந்த தொழிற்சாலைகளில் இருந்து தேவயைற்ற கண்ணாடி போத்தல்கள் கடற்கரையில் அளவுக்கு அதிகமாக கொட்டப்பட்டுள்ளன.

உடைந்த கூர்மையான கண்ணாடி துண்டுகள் என்பதால் மனிதர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வில்லை.

இயற்கை செய்த திருப்பத்தால் கண்ணாடி துண்டுகள் எல்லாம் நீரால் அரிக்கப்பட்டு, கூழாங்கற்களைப் போல் வழவழப்பாகி விட்டன.

இவை சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை என அத்தனை கண்ணாடித் துண்டுகளும் கற்கள் போல உருமாறி கரைக்கு வந்தடைந்துள்ளது.

எனவே கடற்கரை முழுவதும் பல்வேறு நிறங்களிலான கண்ணாடிக் கற்களால் காட்சியளிக்கின்றதுடன், இதனை பார்வையிடுவதற்காக உள்நாட்டிலிருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் செல்கின்றனர்.

மேலும், கரைகளில் ஒதுங்கும் கண்ணாடிக் கற்களை சேகரிப்பதற்கும் சற்றுத் தொலைவில் உறைந்திருக்கும் பனிப்பாறைகளைப் புகைப்படம் எடுப்பதற்கும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

Comments