யால பூங்காவில் சிறுத்தைகளின் செயற்பாடு! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்

Report Print Vethu Vethu in இயற்கை

யால தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தேசிய பூங்காவில் ஒரே நேரத்தில் நான்கு சிறுத்தைகளை ஒரே நேரத்தில் பார்க்கக்கூடிய அரிய வாய்ப்பு இலங்கையர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளுக்கு கிடைத்துள்ளது.

யால தேசிய பூங்காவின் கொமா என்ற ஏரிக்கு அருகில் நான்கு சிறுத்தைகள் ஒன்று கூடியுள்ளன. இந்த அரிய நிகழ்வு கடந்த 17ஆம் திகதி காலை 6.30 மணியளவில் நடந்துள்ளது.

இலங்கையில் வேகமாக அழிந்து வரும் மிருக இனமாக சிறுத்தை காணப்படுகிறது.

யால, வில்பத்து போன்ற பூங்காவில் மாத்திரமே சிறுத்தைகளை காண முடிகின்றன. யால பூங்காவில் 55 சிறுத்தைகள் மாத்திரமே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சிறுத்தைகளை பார்வையிடுவதற்காக அதிகளவான சுற்றுலா பயணிகள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் யால பூங்காவுக்கு வருவாக அதன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Comments