அந்தமான் நிக்கோபர் தீவு மற்றும் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

Report Print Vino in இயற்கை

வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள தீவு கூட்டங்களான அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட நிக்கோபர் தீவில் இன்று காலை 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.9 அலகுகளாக பதிவானதாக இந்திய புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதே நேரத்தில் இந்தோனேசியாவிலும் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்றைய நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

அத்துடன் அங்கு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமையால் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை தொடர்பில் செய்திகள் வெளியாகவில்லை.

அத்துடன் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3.9 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments