இலங்கையில் எரிமலைகள் இல்லாதது ஏன்? மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்

Report Print Vethu Vethu in இயற்கை

இலங்கை எரிமலைகளின் அச்சுறுத்தல் இல்லாத நாடாகவே கருதப்படுகின்றது.

உலக நாடுகளுக்குள் இலங்கைக்கு அந்த அதிஷ்டம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. எப்படியிருப்பினும் இலங்கையினுள் எரிமலைகள் இல்லாமைக்கான காரணம் என்ன என்பதனை தற்போது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

புளோரிடா பல்கலைக்கழகம் மற்றும் எடின்பரோ பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய, பூமியில் 620 இடங்களில் கடல் நீர் தேங்கியுள்ளதாகவும், பூமியின் நிறையில் நூற்றுக்கு 1.5 வீதம் வரையில் நீர்மட்டம் பூமிக்கு ஆழத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூமிக்கு நடுவில் காணப்படுகின்ற லாவா மற்றும் அதிக வெப்பம் வெளியே வராமல் இந்த நீர் தடுத்து பாதுகாத்து வைத்துள்ளதாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில பலவீனமான இடங்களில் லாவா மற்றும் அதிக வெப்பம் மேலே பயணித்து மீண்டும் பூமிக்கு கீழ் பயணித்து விடுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய ஏதாவது ஒரு நாட்டில் எரிமலை இல்லை என்றால் அந்த நாட்டின் பூமிக்கு அடியில் பாரிய நீர் தேங்கியிருக்கும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments