இலங்கை போன்ற நாட்டை எங்கும் காணமுடியாது! அருட்தந்தை ஜோசப் இக்னேசியஸ்

Report Print Kumar in இயற்கை

அழகான இலங்கையினை முன்னோக்கிய பாதையில் கொண்டுசெல்லவேண்டுமானால் அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையும் சமாதானமும் சகவாழ்வு சூழ்நிலையும் ஏற்படவேண்டும் என மட்டக்களப்பு ஆயர் இல்லத்தினை சேர்ந்த மேலாளர் அருட்தந்தை ஜோசப் இக்னேசியஸ் தெரிவித்தார்.

தேசிய சேமிப்பு வங்கியின் 45வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரக்கிளை விசேட நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

மட்டக்களப்பு கிளையின் முகாமையாளர் எஸ்.வி.சுவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு ஆயர் இல்லத்தினை சேர்ந்த மேலாளர் அருட்தந்தை ஜோசப் இக்னேசியஸ், சிவஸ்ரீ மகேஸ்வர சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தின் ஏற்படுத்தும் வகையில் இந்த தேசிய சேமிப்பு வழங்கி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் 257 கிளைகள் இன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 27வது கிளையாக மட்டக்களப்பு கிளை உருவாக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் ஏ.எல்.அப்துல் கலீம் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அருட்தந்தை,

இலங்கை போன்ற நாட்டை உலகில் எங்கும் காணமுடியாது. இந்த நாட்டில் இருக்கும் சந்தோசம், சுதந்திரம், இந்த சிறிய நாட்டில் உள்ள சிறந்த காலநிலை வேறு எந்த நாட்டிற்கு சென்றாலும் அரிதாகும்.

அழகான இந்த இலங்கையினை பயன்படுத்தி நாங்கள் வாழவேண்டும். எதிர்கால சமூகத்திற்கு அதனை விட்டுச்செல்லவேண்டும் என்றார்.

Comments