பராக்கிரம சமுத்திரத்தை விட மொரகஹாகந்த நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு

Report Print Steephen Steephen in இயற்கை

பராக்கிரம சமுத்திரத்தின் நீர் மட்டத்தை விட மொரகஹாகந்த நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் கொண்ட பராக்கிரம சமுத்திரத்தை விட அதிகரித்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் மட்டத்தில் மொரகஹாகந்த நீர்தேக்கத்திற்கு நீர் கிடைத்துள்ளது. திட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பீ.ஜி.தயானந்த தெரிவித்துள்ளார்.

மொரகஹாகந்த திட்டத்திற்காக நிலங்களை பெற்றுக்கொண்ட மக்களுக்கு இழப்பீடாக இதுவரை 6 ஆயிரம் மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீடு பெற்றுக்கொண்டவர்கள் மீண்டும் 50 வீத இழப்பீட்டை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர மேலும் கூறியுள்ளார்.

Comments