சுமார் 170 ஏக்கர் பயிர்ச்செய்கை அழிவு

Report Print Yathu in இயற்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக துணுக்காய் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள பத்து சிறிய குளங்களில் நீரின்றி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த குளங்களின் கீழுள்ள சுமார் 170 ஏக்கர் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவுகின்ற கடும் வறட்சி காரணமாக குளங்களின் நீர் மட்டம் மிகக்குறைவாக காணப்படுகின்றது.

துணுக்காய் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள 10 இற்கும் மேற்பட்ட குளங்கள் நீரின்றி காணப்படுவதுடன், இதன் கீழரான பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இக்குளங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சுமார் 170 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்ச்செய்கை முழுமையாக அழிவடைந்திருக்கின்றன.

இது தொடர்பில் துணுக்காய் கமநலசேவை நிலையத்தின் உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

எமது கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள சொக்கன்குளம், அனிஞ்சியன்குளம், துணுக்காய் குளம், புத்துவெட்டுவான்குளம், கொல்லங்குளம்,

கீழ்க்குளம், பட்டங்கட்டிக்குளம், வேட்டையடைப்புக்குளம், குஞ்சுக்குளம், கரைம்பகைகுளம் உள்ளிட்ட குளங்கள் நீரின்றி காணப்படுகின்றன. இதன் கீழான பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது இது தொடர்பான விபரங்களை சேகரித்து வருவதுடன், காப்புறுதி செய்த விவசாயிகளுக்கு காப்புறுதி பணத்தைப் பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.