இலங்கையில் காணப்படும் பாதுகாக்கப்பட்ட வனாந்திரங்களின் எல்லைகளை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் ஜீ.பி.எஸ். தொழில்நுட்பத்தைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட வனாந்திரங்களின் எல்லைகள் அடையாளமிடப்படவுள்ளன.
இலங்கையில் பாரியளவில் நடைபெறும் காடழிப்பு பிரச்சினைக்கு இதன் மூலம் தீர்வு காணமுடியும் என்று வனப்பாதுகாப்புத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.
இலங்கையில் வனப்பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான 40 வீதமான பாதுகாக்கப்பட்ட வனாந்திரங்கள் தொடர்பாக இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவில்லை என்று அதன் பணிப்பாளர் நாயகம் அனுர சதுருசிங்க தெரிவித்துள்ளார்